இந்த இணையத்தளம் மென்மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மெருகூட்டப்படும் தொடர்ந்து உலாவாருங்கள்!

கட்டுரைகள்



ஆசியுரை

“கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் அவையர்க்கு அணி.” என்ற வள்ளுவன் வழி வாழ்வாங்கு வாழத் தலைப்பட்டுள்ள என் மனம் கவர் மாணவர்களாகிய நீங்கள் தற்போது புலம் பெயர்ந்து இருந்தாலும் தாய்மண்ணையும் வாழ்வித்த பாடசாலையையும் என்றும், என்றென்றும் மறவாது பணியாற்றி வருகிறீர்கள். உங்கள் பணியால் என்றும் புகழ்பூத்த பாடசாலையாகிய வஃஓமந்தை மத்திய கல்லூரி உயர்ந்தோங்கி நிற்கின்றது. உயர் எண்ணெங்கள் உதிக்கும் போது உயர் ஆற்றலும் ஆளுமையும் கூடவே பிறக்கும். அம்முகம் காட்டும் முகவரியை முகத்தால் பெற்ற நீங்கள் அனைவரும் என் கண்கள்.

1956 – 1989 வரை நான் ஓமந்தை மத்திய கல்லூரியை ஒளியூட்டியது போல் என்னால் வளர்க்கப்பட்ட நீங்களும் அப்பணியைத் தொடர்ந்து செய்வீர்கள் என்ற அசையாத நம்பிக்கை எனக்குண்டு. நிறை ஆசானின் ஆசீர்வாதங்கள் பின் தொடர வளர்க்கப்பட்ட நீங்கள் உங்களைப் போன்ற இளஞ்சிறார்களையும் வளர்த்தெடுக்கும் பணி உங்கள் கைகளில் தங்கியுள்ளது என்பதை மறந்து விடாது செயற்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை என் கண்கள் பார்த்திருக்கும் போதே பணி செய்து வருகின்றீர்கள். நல்லெண்ணங்கள் நீரில் மிதக்கும் தக்கை போன்றவை யார் அமிழ்த்தினாலும் அவை மீளவும் மேலே வரும் சக்தி பெற்றவை. நல் விதைகளாய் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்ட முத்துக்கள் நீங்கள். புலம்பெயர்ந்த போதும் நாட்டுப்பற்றோடு சாதனையால் செயல் புரிந்து வருகின்றீர்கள் என்பதை எண்ணும் போது எனக்கும் புத்துணர்வையும் புதுத்தெண்பையும் பிறப்பிக்கச் செய்துவிட்டீர்கள்.

கல்விக் கண்ணைத் திறக்கும் சீர்பெற்ற சமுதாயத்தை தோற்றுவிக்க உங்கள் இணைந்த கரங்கள் மேலும் இணையட்டும். உங்கள் சேவையால் இளஞ்சிறார்களிடம் மறைந்துள்ள திறமைகள் குன்றின் மேலிட்ட தீபமாய் பிரகாசித்து உலகிற்கு ஒளியூட்டவேண்டும் என்பதே என் பெருவிருப்பு. இவ் விருப்பினையை நிறைவடையச் செய்யச் துணிந்த உள்ளத்துடனும், பெருவிருப்புடனும் பணியாற்றும் உங்கள் சேவை மென்மேலும் மிளிர, வளர்ந்தோங்கி சிறப்புற என் உள்ளம் நிறைந்த ஆசிகளை என்றும், என்றென்றும் வழங்கி வாழ்த்தி அமர்கின்றேன்.


 “செயல் நீர்மை உயரின் செய்பணி சிறக்கும்
 வாழ்க மலர்க நம் சேவை.”

திருமதி. M. J . அமிர்தரட்ணம்
இளைப்பாறிய பிரதி அதிபர்,
ஆங்கில ஆசிரியர்  (மேரி ரீச்சர்)
ஓமந்தை மத்திய கல்லூரி.




ஆசிரியப் பணியில் ஓமந்தை மகா வித்தியாலயம்……………

      ஆசிரிய சேவையின் ஒன்பது வருட அனுபவத்தோடு பயிற்றப்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரியராக 1980.09.15 அன்று வ/ஓமந்தை மகா வித்தியாலயத்தில் காலடி பதித்தேன்.
      அன்று அதிபராக கடமைபுரிந்த அதிபர் திரு. கா. லோகசிங்கம் அவர்களும் இருபத்தியாறு ஆசிரியர்களும் இன்முகத்துடன் வரவேற்றனர். பாடசாலை புதிதாக இருப்பினும் அங்கிருந்தவர்கள் ஏற்கனவே செயலமர்வுகளிலும், போட்டிகளிலும், கூட்டங்களிலும் அறிமுகமானவர்கள் ஆகையினால் பயமின்றிக் கூச்சமின்றி எனது கடமையினை ஆரம்பித்தேன். ஆரம்பக்கல்வியானது வீட்டிற்கு அத்திவாரம் போன்று, கல்விக்கு அத்திவாரம் கல்வியினை மாணவர் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும் விருப்புடன் பாடசாலைக்கு வந்து கற்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். ஆயினும் கல்வியை விளையாட்டாகக் கருதக்கூடாது என்பதற்காக மாணவர்களுடன் கடுமையாகவே நடந்துகொண்டேன்  மாணவர் பழக்கவழக்கங்களிலும் ஒழுக்கத்திலும் வளர வழிநடத்தினேன்.

      எனது ஆசிரியபயிற்சி ஆரம்பக்கல்வி ஆயினும் எனது அதிபர் திரு. கா. லோகசிங்கம் அவர்கள் ஆசிரியர்களின் திறமை கண்டு வேலைவாங்குவதில் வல்லவர் என்னை ஆரம்பக்கல்வியோடு மட்டும் விட்டு விடாது தரம் ஒன்றில் ஏற்றுக்கொண்ட மாணவர்களைத் தொடர்ந்து தரம் ஐந்து வரை கற்பித்து மேலும் ஆறு முதல் ஒன்பது வரை தமிழ்ப்பாடம் கற்பிப்பதற்கு அனுமதித்ததின் மூலம் உயர்தரத்தில் கல்விகற்கும் போதும் மாணவர் ஆசிரியர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அத்தடன் பாடசாலையில் உடற்கல்விக்குப் பொறுப்பாக பெண் ஆசிரியர் இல்லாத இடைவெளியை நிரப்புவதற்காக என்னை நியமித்தார் அதனால் பாடசாலை மாணவர்கள் அனைவரும் (1-13வரை) எனது வழிகாட்டலுக்கு உள்ளானது எனது பெருமைக்குரிய விடயம். அத்துடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய வகுப்பினைச் சில வருடங்கள் தொடர்ந்;து என்னிடம் ஒப்படைத்ததன் மூலம் பல மாணவர்களைச் சித்தி செய்யச் செய்ததோடு பெற்றோர், சமூகத்தின் மதிப்பினையும் பெற இப்பாடசாலை எனக்கு வாய்பளித்ததோடு இந்த அனுபவங்களும் வழிகாட்டல்களும் எனது தொடர்ந்த ஆசிரிய, அதிபர் சேவைக்கு வழிகாட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு உதவியவர் திரு. கா. லோகசிங்கம் அதிபர் அவர்களே. அவர் தற்போது இல்லாவிட்டாலும் அவரை நினைவுகூர்ந்து அவரது ஆத்ம சாந்திக்காக வேண்டுகிறேன். 1989.06.05 அன்று இடமாற்றம் பெற்று உதவி அதிபராக வஃபன்றிக்கெய்தகுளம் பாடசாலைக்குச் சென்ற பின்பும் மக்கள்சேவை மகேசன் சேவை என்பதிற்கிணங்க திரு. வீ. பேரம்பலம் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பினை ஓமந்தை மத்திய கல்லூரியில் நடத்துவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

     ஓமந்தை மத்திய கல்லூரியில் கற்பித்த எட்டுவருட ஒன்பதுமாத காலப்பகுதியில் எனது கற்பித்தலில் வழிநடத்தப்பட்ட மாணவர்களின் பெரும்பாலானோர் கல்லூரியின் பேர் சொல்லக்கூடியதாக உயர்பதவிகளிலும், அரசசேவையிலும், வைத்தியர்களாகவும், அதிபர்களாகவும், ஆசிரியர்களாகவும், வெளிநாடுகளிலும் துலங்குவதில் நான் பெருமையடைகின்றேன். வவுனியா அரச அதிகாரியும் இவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது எமது வாழ்க்கையில் கிடைத்த பெருவெற்றியாகும். இதற்கு சான்றாக

1.   ஓமந்தை மத்திய கல்லூரி நூற்றாண்டு விழாவின் போது எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த டாக்டர் ஜெயாளினி கூறிய வார்த்தை “ரீச்சர் நீங்கள் என்னை வாழ்த்த வேண்டிய இடத்தில் நான் வாழ்த்துகிறேன்” என, அதற்கு நான் கூறினேன் “எனது மாணவி என்னை வாழ்த்த நான் கொடுத்து வைத்தவள்” என்று.

2.   எனது சேவை நலன்பாராட்டு விழாவிலும் என்னிடம் கற்ற அதிபர்கள் பலர் என்னை மாலை போட்டு உரையாற்றி வாழ்த்துக் கூறும் போது “எமது மாணவப் பருவத்தில் ஓமந்தை மத்திய கல்லூரியும், விளையாட்டு மைதானமும் வுளோறா ரீச்சரின் புகழ் பாடியதை நாம் மறக்கவில்லை” என்று கூறிய போது நான் எல்லையற்ற மகிழ்வடைந்தேன்.


      பெண் சாரணிய தலைவராக பயிற்சி பெற்ற எனக்கு ஓய்வு பெற்ற பின்பும் பாடசாலைகளில் சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமையால் பங்குனி மாதம் வடக்கு கோட்ட சாரண ஆசிரியர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவத்தில் ஓமந்தை மத்திய கல்லூரியில் கடமையில் ஈடுபடும் போதுகூட எனது ஓமந்தைப் பாடசாலை வாழ்க்கையினை உள்ள+ர நினைவு கூர்ந்து மகிழ்ச்சியடைந்தேன்.


  பல பிரச்சினைகள், இடர்பாடுகள், இடப் பெயர்வுகளுக்குப் பின்பு ஓமந்தை மத்திய கல்லூரி தனித்துவமாக இயங்க ஆரம்பித்துள்ளது அங்கு கல்வி கற்ற மாணவர்களில் பலர் ஆசிரியர்களாக பொறுப்புடனும் உணர்வு பூர்வமாகவும் சேவையாற்றுவதைக் காணமுடிகிறது. வவுனியா மாவட்டத்தில் பெயர் பெற்ற பாடசாலைகளில் ஒன்றாக திகழ்ந்த ஓமந்தை மத்திய கல்லூரி பல இடர்பாடுகளுக்குப் பின் மீண்டும் தலைநிமிர்ந்து தனது செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இச்சந்தர்பத்தில் கற்ற கல்வியையும் கல்லூரியையும் மறவாத இலண்டன் மாநகரில் வாழும் மாணவர் சமூகம் நூற்றூண்டு விழா காலத்தில் முதன் முதலாக ஒன்று கூடல் விழா  எடுக்க முன் வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. இத்துடன் மட்டும் நின்று விடாது கல்லூரியை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கும் தங்கள் ஒத்துழைப்பினையும், பங்களிப்பினையும் அளிப்பதன் மூலம் கல்லூரி மேலும் மேலும் வளர்ச்சியுற வாய்ப்புண்டு என்பது உண்மை. கல்லூரியின் சிறுசிறு தேவைகளை கல்விப் பணிமனையினரும், பொது அமைப்புக்களும் நிறைவு செய்கின்ற போதும் தங்கள் அமைப்பின் உதவியும் கல்லூரிக்கு தேவையானதே. வகுப்பறைகள், கற்றல் தேவைகள் கிடைக்கப் பெறினும் நிகழ்வுகளை, விழாக்களை, நடத்துவதற்கு மேடையுடன் கூடிய ஒன்று கூடல் மண்டபம் ஒன்று கல்லூரிக்குத் தேவையாக உள்ளதை நான் சென்ற போது அவதானிக்க முடிந்தது. “சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்கு அமைய உங்கள் அனைவரின் உதவிகள் ஒன்று சேரும் போது அப்படியான ஒரு மண்டபத்தினை அமைக்க அனைவரின் ஒத்துழைப்புடன் உங்கள் அமைப்பிற்கு முடியும் என்பது எனது எண்ணத்தில் உதயமாகியுள்ளதை இச் சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகிறேன்.

“விழா சிறப்புற எனது வாழ்த்துக்களும்  இறைவனின் ஆசீரும் உரித்தாகுக.”


திருமதி. L. F.  நடேசமூர்த்தி
ஓமந்தை மத்திய கல்லூரி ஆசிரியரும்(முன்னாள்)
வஃஅண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய ஓய்வு பெற்ற அதிபர்.



வாழ்த்துச் செய்தி

ஏர் நடக்கும் வன்னி வள நாட்டில் சீரோடு சிறார் தமைப்பேணி  வளர்க்கும்     பெயர்
பெற்ற வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி வளர்த்தெடுத்த  முத்தாரங்கள் பார் போற்றும் இலண்டன் மாநகரில் நடத்துகின்றனராம் ஓர் ஒன்று கூடல்!! பொய்யல்ல நிஜம்………

இவ்விழாவிற்கு அப்பாடசாலையில் சில ஆண்டுகள் கல்விகற்பித்த (1982-1989) ஆசிரியை என்ற வகையில் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்புவதில் நான் பெரு மகிழ்வடைகிறேன்.

பாடசாலையென்பது சமூகத்தின் பிரதான சேவை நிறுவனமாகும். சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்து, சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஊன்று கோலாகப் பாடசாலைகள் திகழவேண்டும். இப்பாடசாலைகள் சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் மாணவர்க்கு வழங்கி, சிறந்த உயிர்துடிப்புள்ள,   வினைத்திறன்மிக்க, சமூக சிந்தனை உள்ள மாணவர்களை உருவாக்கிக் கொடுப்பதை இலட்சியமாகக் கொள்ளவேண்டும். மாணவர்கள் மனதில்  இலட்சியங்களை கற்சிலைகள் போல் உறுதியாக  உருவாக்கிவிடவேண்டும்.  மாறாக பனிக்கட்டிச் சிலைகளாக இலட்சியங்களை உருவாக்கிவிடின் அவை அடுத்த கணமே உருகித் தண்ணீராகி விடும். இந்தவகையில் இப்பாடசாலையால் உருவாக்கப்பட்ட இன்றய சமூகச்சிற்பிகளான எமது பழைய மாணவர்கள் கற்சிலைகளான இலட்சியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனர். என்பதை இவ்விழா எமக்கு புலப்படுத்துகின்றது. சுயநலமற்ற, சமூக சிந்தனை கொண்ட, ஆளுமைத்திறன் மிக்க மாணவர்களை இப்பாடசாலை உருவாக்கி வெளிக்கொணர்ந்துள்ளது என்பதை இவ்விழா உலகிற்கு பறை சாற்றி நிற்கிறது.  இது மட்டுமல்ல எனது கல்விச் சேவைக்காலத்தில் எமது மாணவர்களின் பல்வேறு வகிபாகங்களைக் கண்டு நான் பெருமிதம் அடைந்ததுண்டு. அல்லல் பட்ட மக்களுக்கு அருஞ்சேவையாற்றும் சமூக சேவகர்களாய் செயற்பட்டார்கள். கல்வி உலகின் கதாநாயகர்களாக செயற்படுகின்றனர். பணிப்பாளர்களாய், செயலாளர்களாய், விரிவுரையாளர்களாய், வைத்தியர்களாய்,…………………………………………மேலும் பற்பல உயர்பதவிகளில் இணைந்து நிற்கும் எமது படைப்பளிகளான இவர்களைக் கண்டு
நாம் நிறைவு கொள்கிறோம். நிம்மதியடைகிறோம்.

“நீ வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்ந்தாய் என்பது தான் முக்கியம்.” “தோன்றில் புகழொடு தோன்றுக” என்கிறார் வள்ளுவப்பெருந்தகை. எனவே ஒவ்வொருவரின் வாழ்க்கையை விட அவர்களின் வாழ்வியல் முறையே வாழ்நாளில் விஞ்சியதாய் நோக்கப்படுகிறது. ஒருவர் தன் வாழ்நாளில் தனக்கும், தன் சமூகத்திற்கும், நாட்டிற்கும் தன்னை அhப்;பணித்து வாழும்போதே வாழ்வு முழுமை பெறுகிறது. ஆகவே உங்களால் மேற்கொள்ளப்படும் இவ் ஆரம்ப விழாவானது அடித்தளமாய் அமைந்து எதிர்வரும் செயற்பாடுகள் மூலம் எமது சமூகத்தின் வருங்கால சிற்பிகளான எம் சிறார்களின் நல்வாழ்விற்கும், சமூக உயர்விற்கும், விடிவிற்கும் வழிகாட்டும் என ஆணித்தரமாக நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.

உங்கள் முயற்சிகள் பல வடிவங்களில் பரிணமித்து எமது சமூகத்திற்கும் பல பணிகள் ஆற்ற வேண்டும். என்பதே எனது வேணவா.

இதயம் உறுதியாக இருந்தால் சுண்டெலியால் கூட யானையைத் தாக்கமுடியும். எனவே தன்னலமற்ற சேவையும், அளவற்ற ஆற்றலும், அஞ்சாமையும், பொறுமையும் கூடிய உங்கள் செயற்பாடுகளால் மகத்தான காரியங்களை நீங்கள் சாதிப்பீர்கள் என்பது  எனது நம்பிக்கை. ஒரு காரியத்தைச் சாதிக்க எத்தனை பேர் முன்வருகிறார்கள் என்பது முக்கியமல்ல எத்தகைய உள்ளம் வாய்ந்தவர்கள் முன்வருகிறாhகள் என்பதே முக்கியம் அதுவே வெற்றியை நிர்ணயிக்கும். எனவே தன்னலமற்ற உண்மையான உள்ளத்தோடும், அர்ப்பணிப்போடும் செயற்பட்டு பல காரியங்களைச் சாதிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

மேலும், எமது பாடசாலைச் செயற்பாட்டுகளினால் பிரமிப்பு மிக்க சமூக சிற்பிகளின் உருவாக்கம் மனநிறைவைத்தரும் அதேவேளை,  என் மனதிலே இடம் பிடித்த எனது கற்பித்தல் சேவையின் முதல் வழிகாட்டியும், மாணவ ஆசிரிய சமூக நலங்களில் அக்கறையுள்ள, சிறந்த தலைமைத்துவப் பண்பு நிறைந்த எமது அதிபர் அமரர். கா. லோகசிங்கம் அவர்களுக்கும், எனது அன்புக்குரிய மாணவன் அமரர் செல்வன் கா. குலநாதன் அவர்கட்கும் எனது கண்ணீர்த்துளிகளைக் காணிக்கையாக்கி நிறைவு செய்கிறேன்.


திருமதி. சிவனேஸ்வரி கதிர்காமநாதன்

(சிவனேஸ் ரீச்சர்)     



1 comment:

  1. பல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள்ளம் என்று ஆகிவிட்டது. என்ன செய்வது...

    ReplyDelete