இந்த இணையத்தளம் மென்மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மெருகூட்டப்படும் தொடர்ந்து உலாவாருங்கள்!

Friday 27 April 2012



திருமதி. L. F.  நடேசமூர்த்தி
ஓமந்தை மத்திய கல்லூரி ஆசிரியரும்(முன்னாள்)
வஃஅண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய ஓய்வு பெற்ற அதிபர்.
ஆசிச்செய்தி


திருமதி. சிவனேஸ்வரி கதிர்காமநாதன்
(சிவனேஸ் ரீச்சர்)  அவர்களின்  வாழ்த்துச் செய்தி.
ஆகியவற்றை வாசிக்க கட்டுரைகள் பக்கத்திற்குச் செல்லவும்.










நூற்றாண்டைநோக்கி ஓமந்தை மத்தியகல்லூரி
வீரகேசரியில் சிறப்புக்கட்டுரை

மேலும் இணைக்கப்பட்ட அனேக படங்களுடன்
-ஓமந்தை மத்தியகல்லூரி நூற்றாண்டு விழாப் படங்களைக்காண 20-11-2011

Tuesday 24 April 2012

ஓமந்தை மத்தியகல்லூரி பழையமாணவர் சங்கம்


ஓமந்தை மத்திய கல்லூரியின் வரலாற்றுப் பதிவுகள
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் பகுதியில் சமூக பொருளாதார மற்றும் கலாசார மேம்பாட்டிற்கு கல்வியின் அவசியத்தினை உணர்ந்ததன் விளைவாக இலங்கையில் கிராமங்கள் தோறும் பாடசாலைகளை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. அந்தச் சிந்தனையின் விளைவாக 1911 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20ம் திகதி ஓமந்தை புகையிரத வீதிக்கு மேற்காக ஓர் ஆரம்ப பாடசாலை உருவாக்கப்பட்டது தான் இன்றைய ஓமந்தை மத்திய கல்லூரியாகும். தற்போது நூறு வருடகால கல்விப் பாரம்பரியத்திளைக் கொண்டுள்ள இக்கல்லூரியின் வரலாற்றுச் சுவடுகளை பின்வரும் தசாப்தங்களாக பிரித்து நோக்கமுடியும்.

1923ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ம் திகதி முதல் 1929ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரை திருவாளர் மு.சுப்பிரமணியம் அவர்கள் பாடசாரையின் அதிபராக கடமையாற்றினர் 

• 1929ஆம் ஆண்டு நவம்பர்; மாதம் 01ம் திகதி முதல் திருவாளர் பி.கே.அம்புறோஸ் அவர்கள் பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்

• 1930ஆம் ஆண்டளவில் இப்பாடசாலை தரம் 01 தொடக்கம் 05 வரையுள்ள ஆரம்பப் பாடசாலையாக யு9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தற்போதைய இடத்தில் நிரந்தரமாக தாபிக்கப்பட்டது.
1929ஆம் ஆண்டு நவம்பர்; மாதம் 01ம் திகதி அதிபராக பதவியேற்ற திருவாளர் பி.கே.அம்புறோஸ் அவர்கள் 1935ஆம் ஆண்டு மே மாதம் 31ம் இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

• 1935ஆம் ஆண்டு யூன் மாதம் 10ம் திகதி முதல் 1935ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை திருவாளர் ஜீ.ஏ. வில்லியம் அவர்கள் பாடசாலையின் பதில் அதிபராக கடமையாற்றினார்

• 1935ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ம் திகதி முதல் 1939ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை திருவாளர் வி. சின்னையா அவர்கள் பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்

• 1940ஆம் ஆண்டு சனவரி; மாதம் 01ம் திகதி முதல் 1941ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரை திருவாளர் எஸ். செபமாலை அவர்கள் பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்

• முதல் தடவையாக மாணவ மாணவிகள் தொகை 100 க்கு மேற்பட்டதாக அதிகரித்தது. 

1941ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரை திருவாளர் ஏ. ஆறுமுகம் அவர்கள் பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்
1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் 1959ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31ம் திகதி வரை திருவாளர் எஸ். சிவலிங்கம் அவர்கள் பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்
• இவர் கடமையாற்றிய காலம் இப்பாடசாலையின் வளர்ச்சியில் ஒரு பொற்காலமாக பலராலும் குறித்துரைக்கப்படுகின்றது.

• முhணவர் தொகை பல நூறுகளாக அதிகரித்ததுடன் நிரந்தர கட்டிட வசதிகளும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தது.

• ஆரம்பப் பாடசாலையாக இருந்த இப்பாடசாலை க.பொ.த (சாஃத) வரை வகுப்புக்களைக் கொண்ட சிரேஸ்ட பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதுடன் இப்பகுதி மாணவர்கள் அரசாங்கப் பரீட்சைகளுக்கு தோற்றும் வாய்ப்பு ஏற்கடுத்திக் கொடுக்கப்பட்;டது.

• இக.காலப் பகுதியில் க.பொ.த (சாஃத) பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுள் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருவாளர் க.ஐயம்பிள்ளை குறிப்பிடத்தக்க ஒருவராவார்.

• 1959ஆம் ஆண்டு மே மாதம் 01ம் திகதி முதல் 1960ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை திருவாளர் சி. பொன்னையா அவர்கள் பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார் 
1961 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01ம் திகதி திருவாளர் சி. கந்தையா அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக பதவியேற்று 1967ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை கடமையாற்றினார்

• இக்காலப் பகுதியில் எமது பாடசாலை வஃஒமந்தை மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டதுடன் 1967 ஆம் ஆண்டு க.பொ.த (உஃத) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் முதல் தடவையாக 1969 ஆம் ஆண்டு க.பொ.த (உஃத) பரீட்சைக்கு தோற்றினார்கள்
.
• திரு. கந்தையா அவர்கள் தான் இப்பாடசாலையில் தூர இடத்தில் இருந்து வரும் மாணவர்களது வசதி கருதி மாணவர் விடுதி அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்;.

• இவரது காலப் பகுதியில் மாணவர் தொகை 400 க்கு மேல் அதிகரித்ததுடன் 15க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கற்பித்தலில் ஈடுபட்டனர். 

• 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01ம் திகதி திருவாளர் பரமேஸ்வரநாதன் அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக பதவியேற்று 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை கடமையாற்றினார். 
1971 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01ம் திகதி முதல் 1973ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ம் திகதி வரை திருவாளர் மு.சிவானந்தம் அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்.

• 1973 ஆம் ஆண்டு மார்;ச் மாதம் 01ம் திகதி இப்பாடசாலையின் அதிபராக கடமைறே;ற திருவாளர் கா. லோகசிங்கம் அவர்கள் 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை கடமையாற்றினார்.

• திருவாளர் கா. லோகசிங்கம் அவர்களது காலப்பகுதியும் இப்பாடசாலையின் வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சிக் காலமாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது.

• 1975 ஆம் ஆண்டு க.பொ.த (உஃத) பரீட்சைக்கு 12 மாணவர்;கள் தோற்றி 09 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் இப்பாடசாலையிலிருந்து முதல் முதலாக பல்கலைக்கழகம் சென்ற பெருமை காலம் சென்ற உயர்திரு. சு.மர்மாலனந்தகுமார் அவர்களைச் சாரும். இப்பாடசாலையின் கொத்தனி அதிபராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

• 1976 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01ம் திகதி முதல் 1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை திருவாளர் கதிர்காமநாதன் அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்.

• இப்பாடசாலையின் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு திருவாளர் கா. லோகசிங்கம் அவர்கள் 1978ஆம் ஆண்டு சனவரி மாதம் 01ம் திகதி மீண்டும் இப்பாடசாலையின் அதிபராக பதவியேற்றார்.

• மாணவர் தொகை 400க்கு மேல் அதிகரித்ததுடன் 20க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கற்பித்தலில் ஈடுபட்டனர்

• 1977 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட க.பொ.த (உஃத) விஞ்ஞானப் பிரிவிலிருந்து 1979 ஆம. ஆண்டு 09 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.

• ஓமந்தை மகாவித்தியாலயம் மாவட்டத்தின் முதலரம் தரப் பாடசாலையாக (1யுடீ) தரமுயர்த்தப்படுத்தப்பட்டது 
இப்பாடசாலையின் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு 1978ஆம் ஆண்டு சனவரி மாதம் 01ம் திகதி மீண்டும் இப்பாடசாலையின் அதிபராக பதவியேற்ற திருவாளர் கா. லோகசிங்கம் அவர்கள் 1989 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி வரை சுமார் 17 வருடங்கள் கடமையாற்றினார்.

• இம் மாவட்டத்தில் மாடிக்கட்டிடம் இப்பாடசாலையிலேயே முதன் முதலாக 1984 ஆம் ஆண்டு திருவாளர் கா. லோகசிங்கம் அவர்களது பெருமுயற்சியினால் அமைக்கப்பட்டது

• 1000 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளும் 30க்கு மேற்பட்ட ஆசிரியரகளும் பாடசாலையில் இருந்தனர். 

• இப்பாடசாலையிலிருந்து முதலாவதாக பல்கலைக்கழகம் சென்ற திருவாளர் சு.மர்மலானந்தகுமார் அவர்கள் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்.
1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி இப்பாடசாலையின் அதிபராக கடமையேற்ற திருவாளர் சு.மர்மலானந்தகுமார் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி வரை அப்பதவியை வகித்தார்.

• இவர் அதிபராக இருந்த காலப்பகுதியில் நிலவிய போர் சூழல் காரணமாக பல கட்டிடங்கள் மற்றும் தளபாடங்கள் அழிவுற்றதுடன் மாணவர்களும் ஆசிரியர்களும் நகர்புறப் பாடசாலைகளுக்கு பாதுகாப்புத் தேடி நகரந்த நிலையில் கூட அயராது செயற்பட்டு பாடசாலையை வளர்ச்சி நிலைக்கு கொண்டு சென்றார். அந்த வகையில்
1992 ஆம் ஆண்டு க.பொ.த (உஃத)இ க.பொ.த (சாஃத) மற்றும் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பiPட்சைகயில் மாவட்ட சீதியில் சிறந்த பெறுபேறுகள் எமது பாடசலைக்கு கிடைத்தது 
முதன் முதலாக பாடசாலையில் பரிசளிப்பு விழா கொண்டாடப்பட்டு விih மலரும் வெளியிடப்பட்டது 
புhடசாலையில் ஒரு பாண்ட் வாத்தியக் குழு அமைக்கப்பட்டது; 
வஃஒமந்தை மகா வித்தியாலயம் வஃஒமந்தை மத்திய கல்லூரியாக மாற்றியமைக்கப்பட்டது 

• 1994 ஆம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி முதல் 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரை திருவாளர் சி.வே.பேரம்பலம் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்.

• இவரது காலப்பகுதியில்
பல வருடங்கள் இயங்காமல் இருந்த மாணவர விடுதி மீண்டும் இயக்கப்பட்டு மாணவரகளுக்கு தங்குமிட வசதியளிக்கப்பட்டது 
மாணவர்களது ஒழுக்கம் மற்றும் கல்வியில் முன்னேற்றமடைந்தது. 
மாணவர் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டது 
ஆசிரியர் விடுதி அமைப்பதற்கென அருகாமையிலிருந்த காணி வாங்கப்பட்டது 

• 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 30அ; திகதி வரையான ஒரு மாத காலப்பகுதிக்கு திருமதி கே.இராஜகுலவீரசிங்கம் அவர்கள் பதில் அதிபராக கடமையேற்றிருந்தார்;.

• 1997 ஆம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி முதல் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை திருவாளர் ச.சுப்பையா அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்.

• இவர் அதிபராக பதவியேற்று 13 நாட்களில் ‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கை காரணமாக இப்பிரதேச மக்கள் இடம் பெயரவே பாடசாலையும் தற்காலிக இடவமைப்படுத்த வேண்டி ஏற்பட்டது. இதன்படி கோவில் குஞ்சுக்குளம் எனும் இடத்தில் தற்காலிகமாக இயங்க வைக்கப்பட்டது.

• 1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி முதல் 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி வரை திருவாளர் அ.ஸ்ரீகரன் அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்.

• பாடசாலை கோவில் குஞ்சுக்குளம் எனும் இடத்தில் தற்காலிகமாக இயங்கியதுடன் சுமார் 900 மாணவ மாணவிகள் கல்வி கற்றனர்.

• 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி இப்பாடசாலையின் இன்னொரு பழைய மாணவரான திருவாளர் மூ.அரசரெத்தினம் அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக கடமையேற்றார்;.
திருவாளர் மூ.அரசரெத்தினம் அவர்கள் ஜெயசிக்குறு மற்றும் ரணகோஷ இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கோவில் குஞ்சுக்குளத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த ஒமந்தை மத்திய கல்லூரி மேலும் பாதிப்படைந்த நிலையிலும் மிகுந்த துணிச்சலுடனும் ஆர்வத்துடனும் கல்லூரியை தொடர்ந்து இயங்கச் செய்தார்

• இத்தசாப்த்தில் இவரது முயற்சிகளில் முக்கியமானவற்றை பின்வருமாறு பட்டியலிடலாம்
பெற்றோர்களது ஒத்துழைப்புடன் பரீட்சைகளுக்கு படிக்கக்கூடியவாறு மின்னொளி வழங்கி சிறந்த பெறுபேறுகளை பெற வழிசெய்தமை 
இடைக்கால சமாதான செய்முறைகளின் போது கல்லூரியைச் சொந்த இடத்தில் இயங்க வைத்தமை. மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினைப் பெற்றுக் கொடுத்தமைஇ கணிணி கற்கை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டமை மற்றும் அதிபர் விடுதி ஒன்று அமைக்கப்பட்டமை 
விளையாட்டுத் துறையில் மாணவர்களது திறமைகளை வழிப்படுத்தி இரண்டு மாணவர்களை தேசிய மட்டப் போட்டிகளில் பங்கு பெறச் செய்தமை 
கல்லூரியில் சாரணர் இயக்கத்தினை மீள ஆரம்பித்தமையுடன் வடமாகாணத்தில் பெண் ஆரம்பிக்கப்பட்டது என்ற பெருமையை பெற்றுக் கொடுத்தமை 

• யுத்த முடிவினைத் தொடர்ந்து எமது கல்லூரி இடம் பெயர்ந்தவர்களை விசாரணை செய்தல் மற்றும் பதிவு செய்யும் முகாமாகவும் பின்பு சரணடைந்த விடுதலைப் புலிகளை விசாரணை செய்தல் மற்றும் புனர்வாழ்வு அளிக்கும் முகாமாகவும் இராணுவத்தினர் பயன்படுத்தினர்;.

• கல்லூரி ஒமந்தை வராசக்தி விநாயகர் ஆலய மண்டபம் மற்றும் ஆலய முற்றலில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளிலும் இயங்கி வந்தது.
இத்தசாப்த்திலும் திருவாளர் மூ.அரசரெத்தினம் அவர்களே அதிபராக தொடர்ந்து கடமையாற்றி வருகின்றார்

• கல்லூரி 2011 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆம் திகதி மீண்டும் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டு அதே வருடம் ஜுலை மாதம் 29ம் திகதி முதல் கற்றல் நடவடிக்கைகளுக்கு கொண்டுவரப்பட்டது.

• மூன்று சாரணர்கள் ஜனாதிபதி விருது பெற்றனர்

• 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர மாதம் 19 ஆம் திகதி எமது கல்லூரி கல்விப் பணியில் தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடவுள்ளது. .