இந்த இணையத்தளம் மென்மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மெருகூட்டப்படும் தொடர்ந்து உலாவாருங்கள்!

அறிவித்தல்









ஓமந்தை மத்திய கல்லூரியின் புதிய அதிபரின் வேண்டுகோள்.

அன்பார்ந்த பெற்றோர்கள் நலன்விரும்பிகள் பழைய மாணவர்கள் அனைவருக்கும்
வணக்கம்
///////////////////
      நான் கடந்த 10.10.2022 இப் பாடசாலைக்கு அதிபராக வந்தேன் பல்வேறுபட்ட எதிர் பார்ப்புடன் வருகை தந்தேன்
ஆனால் இப்படி ஒரு பாடசாலை
A9 வீதியில் இருப்பதை எண்ணி என்மனம் வேதனை அடைந்தது 
                  கடந்த நான்கு தினங்களாக முழுமையாக அவதானம் செலுத்தினேன்
கீழ்க்காணும் நிலை என் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தது
_____________________

@.பாடசாலையின் அலுவலகத்தில் எந்த பொருளும் இயங்கவில்லை
___________________________
மாணவர்கள் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லை
______________________________
மாணவர்கள் பயன் படுத்த
ஆண் மாணவர்களுக்கு மலசல
தொகுதி இல்லை (இருந்தும் சேதமடைந்த நிலையில்)
____________________________
பாடசாலையில் உள்ள நீர் குழாய்களில் இருந்து நீர் வருவதில்லை அனைத்து சேதமடைந்த நிலையில்
_________________________________
இரண்டாம் மாடி வகுப்பறைகள்
ஐந்து புறா எச்சம் காரணமாக
மாணவர்கள் வகுப்பறையில்
கல்வி கற்க முடியாத நிலை
க.பொ.த.(உ.த) வகுப்புகள் அமைந்துள்ள கட்டிடத் தொகுதியில் புறா எச்சம் காரணமாக மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை
__________________________
மின்சாரம் இருந்தும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது /ஒமுங்கற்ற முறையில் உள்ளது
_____________________________________
மகிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தில் யன்னல்கள் உடைந்த
நிலையில் பூட்டுகள் பழுதடைந்த நிலையில்
________________________________
மூன்று மாடிக் கட்டிடம் மின் இணைப்பு இல்லை/நீர் வசதி இல்லை
____________________________________
பாடசாலை மாணவர்களுக்கு ஏற்ற கவின் நிலையுள்ள பாடசாலையாக இல்லை
_____________________________
மருந்த்துவமனை அமைந்துள்ள வேலி சேதமடைந்த நிலையில்
__________________________
பெண் ஆசிரியர்களுக்கு மலசல கூட வசதி இல்லை
______________________________
பாடசாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா எதுவும் இயங்காத நிலை
______________________________
பாடசாலையில் பாடங்களுக்கு
மணி அடிப்பதற்கு உரிய பெல் வசதி இல்லை

   எனவே இந்த பாடசாலைக்கு வருகை தந்த பின்னர் மேல் கூறப்பட்ட விடையங்கள் என்னால் அவதானிக்க கூடியதாக இருந்தது
               இன்றைய தினம் என்னால் பெற்றோர்கள் மூலமாக சிரமதான பணி இடம்பெற்றது இதில் 250 பெற்றோர்கள் வருகை தந்து பூரணமான ஒத்துழைபு வழங்கி இருந்தார்கள் பல்வேறுபட்ட சிரமங்கள் மத்தியிலும் உரிய நேரத்திற்கு வருகை தந்து
ஒத்துழைப்பு வழங்கி அனைத்து பெற்றோர்களும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
                       என்னால் முடியுமான வரை உண்மைத் தன்மையுடன் வெளிப்படையாக
எனது செயற்பாடுகள் இருக்கும்
           பெற்றோர்கள்/பழைய மாணவர்கள்/நலன் விரும்பிகள் அனைவரையும் இணைத்துக் கொண்டு எனது செயற்பாடுகள் இருக்கும்
           ஒரு காலத்தில் வவுனியா மாவட்டத்தில் மிகவும் பிரபலமான பாடசாலையாக இப்பாடசாலை இருந்து இப் பாடசாலையில் கல்வி கற்ற பலர் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்
எனவே இயலுமானவரை உண்மைத் தன்மையுடன் என்னால் ஆன முயற்சிகளை மேற் கொள்வேன் தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன்
















18.05.2013 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு இலண்டன் வெம்பிளியில் நடைபெற்ற ஓமந்தை மத்திய கல்லூரியினதும், கொத்தணி பாடசாலைகளினதும் பழைய மாணவர் சங்கத்தின் 2013ம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல், விளையாட்டுப்போட்டி தொடர்பாக இடம் பெற்ற கலந்துரையாடல்.



















No comments:

Post a Comment