இந்த இணையத்தளம் மென்மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மெருகூட்டப்படும் தொடர்ந்து உலாவாருங்கள்!

Wednesday 11 December 2013

நூல்வெளியீடு "ஜோதியும் சுடரும்".


நூல்வெளியீடு "ஜோதியும் சுடரும்". முன்னாள் வவுனியா உதவி அரசாங்க அதிபரும், வவுனியா சேக்கிழார் மன்றத் தலைவரும், ஓமந்தை மத்திய கல்லூரியின் பழையமாணவருமாகிய திரு.கந்தையா ஐயம்பிள்ளை எழுதிய 
"ஜோதியும் சுடரும்" என்னும் நூல் இலண்டன் மனோ பாக்(MANOR PARK)கில் அமைந்துள்ள சைவமுன்னேற்றச்  சங்க(UK) மண்ட பத்தில் 
சங்கத்தின் சமூகசேவைச் செயலாளர் திருமதி புவனேஸ்வரி சபாரட்ணம் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது. இலண்டன் சுடரொளிப் பத்திரிகையின் ஆசிரியர்
 திரு. ஐ. தி. சம்பந்தன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். சங்கத்தின் தலைவர் திரு. சதாசிவம் ஆனந்ததியாகர் அவர்கள் "நூலின் பண்பும் பயனும்" 
என்னும் பொருளில் சிறப்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது. 
சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. சோ. நிரஞ்சன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. இந்நிழ்வு தொடர்பான சில காட்சிகளைப் படங்களிற் காணுங்கள்.


வன்னி நலன்புரிச்சங்கம் 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை இலண்டன் வெம்பிளி கிறிஸ்ரல் (CRYSTAL HALL)மண்டபத்தில் நடைபெற்ற வருடாந்த மருதநிலா ஒன்றுகூடலும், நூல்வெளியீடும்



வன்னி நலன்புரிச்சங்கம் 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை இலண்டன் வெம்பிளி கிறிஸ்ரல் (CRYSTAL HALL)மண்டபத்தில் நடைபெற்ற வருடாந்த மருதநிலா ஒன்றுகூடலும், நூல்வெளியீடும், சங்கத்தின் தலைவர் கலாநிதி ச.பரமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு இளைப்பாறிய வவுனியா உதவி அரசாங்க அதிபரும்,ஓமந்தை மத்திய கல்லூரியின் விசேட பழைய மாணவரும், "இலங்கையின் வன்னிமாவட்டங்கள் - ஒரு கையேடு" என்னும் நூலின் தமிழாக்ககுழுவின் தலைவருமாகிய திரு. கந்தையா ஐயம்பிள்ளை பிரதம விருந்தினராகவும், ஓய்வுபெற்ற வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சிதம்பரப்பிள்ளை இரகுநாதபிள்ளை அர்களும், ஓய்வுபெற்ற வவுனியா வடக்கு (நெடுங்கேணி) உதவி அரசாங்க அதிபர் திரு. சின்னையா பாலசுந்தரம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். முன்னாள் யாழ் - பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி இ. நித்தியானந்தன் அவர்கள் நூலைப்பற்றிய ஆய்வுரையையும், இலண்டன் தமிழ் இலக்கிய மன்றத்தலைவர் வவுனியூர் திரு. இரா. உதயணன் அவர்கள் நூல் அறிமுகவுரையும் ஆற்றினர். சங்கத்தின் செயலாளர் திரு குகதாசன் மயூரன் நன்றியுரை கூறினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிரபல தென்னக சினிமாப் பாடகர் அமரர் சௌந்தரராஜனின் மகனான திரு. செல்வகுமார் குழுவினரின் இன்னிசைவிருந்து சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இந்நிகழ்சியின் சில படங்களை இங்கே காணுங்கள்.



+

Sunday 19 May 2013



18.05.2013 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு இலண்டன் வெம்பிளியில் நடைபெற்ற ஓமந்தை மத்திய கல்லூரியினதும், கொத்தணி பாடசாலைகளினதும் பழைய மாணவர் சங்கத்தின் 2013ம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல், விளையாட்டுப்போட்டி தொடர்பாக இடம் பெற்ற கலந்துரையாடல்.