இந்த இணையத்தளம் மென்மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மெருகூட்டப்படும் தொடர்ந்து உலாவாருங்கள்!

Wednesday, 11 December 2013

நூல்வெளியீடு "ஜோதியும் சுடரும்".


நூல்வெளியீடு "ஜோதியும் சுடரும்". முன்னாள் வவுனியா உதவி அரசாங்க அதிபரும், வவுனியா சேக்கிழார் மன்றத் தலைவரும், ஓமந்தை மத்திய கல்லூரியின் பழையமாணவருமாகிய திரு.கந்தையா ஐயம்பிள்ளை எழுதிய 
"ஜோதியும் சுடரும்" என்னும் நூல் இலண்டன் மனோ பாக்(MANOR PARK)கில் அமைந்துள்ள சைவமுன்னேற்றச்  சங்க(UK) மண்ட பத்தில் 
சங்கத்தின் சமூகசேவைச் செயலாளர் திருமதி புவனேஸ்வரி சபாரட்ணம் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது. இலண்டன் சுடரொளிப் பத்திரிகையின் ஆசிரியர்
 திரு. ஐ. தி. சம்பந்தன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். சங்கத்தின் தலைவர் திரு. சதாசிவம் ஆனந்ததியாகர் அவர்கள் "நூலின் பண்பும் பயனும்" 
என்னும் பொருளில் சிறப்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது. 
சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. சோ. நிரஞ்சன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. இந்நிழ்வு தொடர்பான சில காட்சிகளைப் படங்களிற் காணுங்கள்.


No comments:

Post a Comment