OMANTHAI
Tuesday, 29 November 2022
Sunday, 20 November 2022
ஓமந்தை பழைய மாணவர் சங்கமும், சேமமடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஒன்று கூடல்
அனைவருக்கும் வணக்கம்
ஓமந்தை பழைய மாணவர் சங்கமும், சேமமடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஒன்று கூடல் 17/12/2022 சனிக்கிழமை மாலை 5 முதல் 11 மணிவரை நடாத்த உள்ளோம்,
நடைபெரும் இடம் : : Preston Manor School, Carlton Ave East, Wembley, HA9 8NA.
இன் நிகழ்வுக்கு உங்கள் பிள்ளைகளின் கலை திறமைகளை மேடை ஏற்ற விரும்புவபர்கள் ஒரு குடும்பத்துக்கு ஒரு நிகழ்வு வீதம் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு உங்கள் பிள்ளைகள் யாராவது கலை வாத்தியம் ( வீணை, வயலின்,keyboard, etc) பழகியிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் (இதை விட குடும்பந்துக்கு ஒருநிகழ்வு)இந்த நிகழ்வை கொண்டு நடாத்த எமது பழைய மாணவர் சங்கத்து உறுப்பினர்கள் பலர் முன் வந்து உள்ளனர். அவர்களை பற்றிய விபரங்கள் பின் அறிவிக்கப்படும், இதில் உங்கள் உதவிகளை தரவிரும்பினால் அதை தயவு செய்து அறிய தரவும். தொடர்புகளுக்கு
07877360218, 07725205639.
இந்த நிகழ்வில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு ஒன்றையும் நடாத்தவுள்ளோம், உங்கள் அதிர்ஷ்டலாப சீட்டினை முன் கூட்டியே வாங்கி பரிசில்களை வெல்லவும், இதில் வரும் பணத்தை எமது பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக பயன் படுத்தப்படும் என்பதை அறிய தருகிறோம்.
நன்றி🙏
ப மா சங்கம்
Tuesday, 15 November 2022
ஓமந்தை மத்திய கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு 10/10/2022
ஓமந்தை மத்திய கல்லூரியின்
புதிய அதிபர் பதவியேற்பு
10/10/2022
ஓமந்தை மத்திய கல்லூரியின் புதிய அதிபரை இன்முகத்துடன் வரவேற்பதோடு, புதிய அதிபரின் பணி மென்மேலும் சிறப்புற எமதுஅன்பானவாழ்த்துக்கள்.
பெரு மதிப்பிற்குரியஅதிபர் பவேந்திரன் ஆசிரியர்
அவர்களை அன்போடு வருக வருக என
இருகரம் கூப்பி வரவேற்றுக்கொள்கின்றோம்.
வன்னி மண்ணின் வரலாறு சொல்லிடும்
வளமிக்க ஓமந்தைப்
பதியில் ஓங்கியே உயர்ந்து நின்றிடும்
மத்திய கல்லூரியின்
தலைமைத்துவப் பெரும் பொறுப்பை
இதயமதாய் ஏற்றிடும்
பெரு மதிப்பிற்குரிய
அதிபர் பவேந்திரன் ஆசிரியர் அவர்களை
அன்போடு வருக வருக என இருகரம் கூப்பி வரவேற்றுக்
கொள்கின்றோம்.
நீவிர் கற்றிட்ட அரும் கல்வியின் பெருமை கூறிடும் இன்றைய இனிய நந்நாளிலே கடவுளின் அருளுடன் அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெற்று என்றென்றும் சிரஞ்சீவியாக வெற்றி வாகை சூடி இனிதாக வாழ்ந்திட இதயம் நிறைந்து வாழ்த்துகின்றோம்🙏🏾
நல்வாழ்த்துக்களுடன்
கல்லூரிப்
பழைய மாணவர்கள்
இன்றைய நாளில் எமது ஓமந்தை மத்திய கல்லூரியில்
சிறப்பாக நடந்தேறிய புதிய அதிபர் பதவியேற்பு வைபவத்தை சிறந்த முறையில் திறம்பட ஒழுங்கமைத்து நெறிப்படுத்திய எமது கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பயிலும் மாணவர்கள்,
பெற்றோர்கள்,
நண்பர்கள், ஓமந்தை வாழ் மக்கள் மற்றும் விழாவில் பங்கேற்று
சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்திட்ட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள பெரிதும் கடமைப் பட்டுள்ளோம்.
Monday, 16 April 2018
அறிவித்தல்
இலவச கருத்தரங்கு பிரபல ஆசான் திரு.P.உமாசங்கரால் அவர்களால்
இடம்-ஓமந்தை மத்திய கல்லூரி காலம்-16.04.2018 திங்கள் நேரம்-காலை 8 மணிமுதல்
அனைத்து உயர்தர வகுப்பு மாணவர்களையும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் அறிவிருட்சம் தமிழ் விருட்சம்




.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



